சனாதன தர்மம்

சனாதன தர்மம்

சனி, 29 மார்ச், 2014

பிரபஞ்ச தோற்றம் (சுவாமி விவேகானந்தர்)

கஸ்மின்னு பகவோ விஜ்ஞாதே ஸர்வ மிதம்
விஜ்ஞாதம் பவதி (முண்டக
உபநிடதம்1.1.3)

எதை அறிந்தால் நாம்
எல்லாவற்றையும் அறிய முடியும்? இந்த
ஆராய்ச்யையே உபநிடதங்கள் தங்கள் ஒரே கருத்தாக
கொண்டிருக்கின்றன.தற்கால மொழியில்
சொல்வதானால்,பொருட்களின் ஓர் அறுதி ஒருமையே
உபநிடதங்களின் நோக்கம்
ஏறக்குறைய எல்லா அத்தியாயங்களுமே துவைத
உபதேசமான உபாசனையில்தான் ஆரம்பிக்கிறது.

இந்த பிரபஞ்சத்தை படைத்து,காத்து,இறுதியில்
நம்முள்ளே ஒடுக்கிக்கொள்பவனே இறைவன்
என்று முதலில் கற்பிக்கப்படுகிறது. புற அக
இயற்கையை வழிநடத்துபவரும் ஆள்பவரும்
அவரே,இயற்கைக்கு வெளியே இருப்பதுபோல்
தோன்றுகிறார் எனவே அவரை வணங்கவேண்டும்
என்று கற்பிக்கப்படுகிறது.
அடுத்தபடியில் அவர் இயற்கைக்கு வெளியில்
இல்லை,ஆனால்
அந்தர்யாமியாக,அதாவது நமக்குள்ளே ஊடுருவிக்கலந்திருக்கிறார்
என்று அதே ஆசிரியர் போதிக்கிறார்,இறுதியில் அந்த
இரண்டு கருத்தும்
கைவிடப்பட்டு,உண்மையானவை எல்லாம்
அவரே,வேறுபாடு என்பது இல்லை என்று போதிக்கப்படுகிறது.

தத்துவமஸி ச்வேதகேதோ(சாந்தோக்கிய உபநிடதம்
6.8.7)ச்வேதகேது அதுவே நீ.அனைத்துள்ளும்
அந்தர்யாமியாக இருக்கும் அந்த ஒரே பொருள்தான்
மனித ஆன்மா. அதுவே நீ,என
தெளிவுபடுத்தப்படுகிறது.

இங்கு எதற்காகவும்
விட்டுக்கொடுத்தல் இல்லை,பிறருடைய அபிப்ராயங்கள்
பற்றி பயம் இல்லை,உண்மை தைரியமாக
கூறப்படுகிறது.

பிரபஞ்சதோற்றம் பற்றிய கருத்து
---------------
வேதாந்த நெறிகள் அனைத்திற்கும் அடிப்படையாக
இருப்பது ஒன்று பிரபஞ்சக்கருத்து இரண்டாவது பொதுவான
மன இயல் உண்மை.வேறுபட்ட
ஆற்றல்களுக்கிடையே ஒற்றுமை இருக்கிறது என்பதை ஏதோ சில
காலத்திற்கு முன்புதான் விஞ்ஞானம்
கண்டுபிடித்தது.வெப்பம்,காந்தம்,மின்சாரம் என்ற
வேறுபட்ட ஆற்றல்கள் அனைத்தும் அடிப்படையில்
ஒன்றே என்றும்,இவை அனைத்தையும் அந்த
அடிப்படை சக்திகளாக மாற்ற முடியும் என்றும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த
அடிப்படை சக்தியை எந்த பெயரில் வேண்டுமானாலும்
அழைக்கலாம்,ஆனால் இந்தக்
கருத்து நமது சம்ஹிதைகளிலேயே சொல்லப்பட்டுவிட்டது.இந்த
உலகில் காணப்படும் ஈர்ப்பாற்றல்,விலக்கும்
ஆற்றல்,மின்சாரம் உட்பட அனைத்தும் பிராணன்
என்னும் அடிப்படை சக்தியிலிருந்தே பிறக்கின்றன
பிராணன் என்றால் என்ன?பிராணன்
என்பது ஸ்பந்தனம்,அதிர்வு.(பிராணன் என்றால்
மூச்சு அல்ல)இந்த பிரபஞ்சம் எல்லாம்
ஒடுங்கி முன்பிருந்ததைப்போல் ஆகும் போது இந்த
அளவற்ற ஆற்றல் என்ன ஆகிறது?
அது அழிந்துவிடுகிறதென்றா நினைக்கிறீர்கள்?
இல்லை,அழிவதில்லை.அவை அழிந்துவிட்டால் அடுத்த
அலை எங்கிருந்து தோன்ற முடியும்?இயக்கம்
என்பது அலைகளைப்போல் எழுவதும் விழுவதுமாக
அல்லவா உள்ளது.
இனி இந்த பிரபஞ்சம் வெளிப்படுவதைக்
குறிக்கின்ற
சிருஷ்டி என்பதை கவனிக்கவேண்டும்.இதன் பொருள்
கிரியேஷன் என்பதல்ல.இதற்கு இணையான
ஆங்கில வார்த்தையில்லை,தோற்றத்திற்கு வருதல்
என்று சொல்லலாம்.ஒரு கல்பத்தின் முடிவில் எல்லாம்
நுண்மையாகி,மேலும்
நுண்மையாகி சிருஷ்டிக்கு முன்பிருந்த
நிலையை அடைகின்றன,மறுபடியும் வெளிப்பட தயாராக
அந்த நிலையிலே அமைதியாக இருக்கின்றன.மீண்டும்
அதிலிருந்து வெளிப்படுவதே சிருஷ்டி அல்லது தோற்றத்திற்கு வருதல்.அந்த
அமைதிநிலையில் எல்லா ஆற்றல்களும்
என்னவாகின்றன? அவைகள் பிராணனில்
ஒடுங்கிவிடுகின்றன.இந்த பிராணன் ஏறக்கறைய
இயக்கமற்றதாகிவிடுகிறது.முற்றிலுமாக
இயக்கமற்று விடுவதில்லை.இதைத்தான் வேத
ஸுக்தம்.ஆனீதவாதம்(ரிக்வேதம்
10.129முதல்322)அது அதிர்வுகளின்றி அதிர்ந்தது என்று கூறுகின்றன.
ஜடம் என்று நாம் அழைக்கின்ற பொருள்
என்னவாகிறது?ஜடத்திலெல்லாம் சக்திகள்
வியாபித்திருக்கின்றன
என்பது உங்ளுக்கு தெரியும்..இந்த ஜடம்
ஆகாசத்தில் ஒடுங்குகிறது.(ஆகாசம்
என்பது வானம் அல்ல).ஆகாசத்தை ஈதர்
என்று ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கலாம்.ஆகாசமே ஜடத்தின்
மூலநிலை.சக்தியின் மூலநிலை பிராணன்
என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இந்த பிராணனின்
இயக்கத்தால் ஆகாசம்
அதிர்கிறது.அடுத்து சிருஷ்டி ஆரம்பிக்கும்
போது இந்த அதிர்வு விரைவாகிறது.அப்போது ஆகாசம்
அலையாகத் திரண்டடித்து,சூரியர்கள் சந்திரர்கள்
என்றேல்லாம் நாம் அழைக்கின்ற இந்த உருவங்கள்
ஆகின்றன.

யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண
ஏஜதி நி:ஸ்ருதம்..(கடோபநிடதம்2.3.2)இந்த
பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் பிராணனின்
அதிர்வால் தோற்றத்திற்கு வருகின்றன.
பிராணன் ஆகாசத்திற்குக் கொடுக்கும் அடிகளின்
பலனாக வாயு அல்லது அதிர்வுகள்
உண்டாகின்றன.இந்த அதிர்வுகளின் வேகத்தால்
ஏற்படும் உராய்வினால் வெப்பம் அல்லது தேஜஸ்
தோன்றுகிறது.இந்த வெப்பம்
திரவமாகிறது,இதுவே அப்பு அல்லது நீர்,பின்னர்
இந்த திரவம் திடன்கிறது.ஆகாசமும் அதிர்வும்
இருந்தது,பின்னர் வெப்பம் வந்தது,பின்னர்
அது திடபொருளாகி,தூலப்பொருளாகச்சுருங்கியது,ஒடுங்கும்
போது துாலத்திலிருந்து தொடங்கி இதே முறையில்
பின்னோக்கி செல்கிறது.இப்படியே பிரபஞ்சம்
தோன்றித்தோன்றி ஒடுங்கிய வண்ணம் இருக்கிறது.
ஆகாசத்தின் துணையின்றி பிராணன் மட்டும்
தனித்து இயங்க முடியாது.அதிர்வு,எண்ணம்,இய
க்கம் என்று நாம் அறியும் சக்திகள் அனைத்தும்
பிராணனுடைய பல்வேறு நிலைகள்.உருவங்கள்
அனைத்தும் ஆகாசத்தின்
பல்வேறு நிலைகள்.ஆதாரப்பொருள் இன்றி பிராணனால்
தனித்து இயங்க முடியாது.ஆகாசமே அதன்
ஆதாரப்பொருள்.ஜடம் இல்லாத
சக்தியையோ,சக்தி இல்லாத ஜடத்தையோ இந்த
பிரபஞ்சத்தில்
இல்லை இரண்டும்இணைந்திருக்கின்றன.
தூலப்பொருட்கள் ஒவ்வொன்றும் தன்மாத்திரைகள்
எனப்படும் நுண் அணுக்களால்
ஆனது.ஒரு பூவிலிருந்து மணம் என்
மூக்கிற்கு வருகிறது.மலர்
அங்கே இருக்கிறது மலரிலிருந்து ஏதோ ஒன்று என்
மூக்கை வந்தடைகிறது இதுதான்
தன்மாத்திரை எனப்படும்.பஞ்சபூதங்கள் அனைத்தும்
இதே போல் தன்மாத்திரைகளால்
ஆக்கப்பட்டது.தன்மாத்திரைகளை இன்னும் நுட்பமான
அணுக்களாக பிரிக்கலாம்.தன்மாத்திரைகளி
லிருந்து தான் நாம் காண்கின்ற உணர்கின்ற
பொருட்களான நிலம் நீர்
போன்றவை படைக்கப்பட்டுள்ளன.இது உங்கள்
மனத்தில் நன்றான பதியவேண்டும்.
இதில் முக்கியமான கருத்து என்னவென்றால்
சூட்சுமத்திலிருந்துதான் ஸ்தூலம்
பிறக்கிறது.ஸ்தூலமாகிய ஜடம் தான் கடைசியில்
தோன்றுகிறது.ஆற்றலில்
ஒருமை உள்ளது.அது பிராணன்.ஜடத்தில்
ஒருமை உள்ளது அது ஆகாசம்.இனி இவை இரண்டிற்கும்
அடிப்படையாக ஏதாவது ஒருமை இருக்கிறதா?
இவற்றை சேர்த்து ஒன்றாக்க முடியுமா?தற்கால
விஞ்ஞானத்தில் இந்த கேள்விக்கு பதில்
இல்லை.இதற்கு பதில் காணும்
ஆற்றலை அவை இன்னும் பெறவில்லை.அந்த
ஆற்றலை பெற வேண்டுமானால்,பழைய கருத்துக்களாகிய
பிராணன்,ஆகாசம் போன்றவற்றை அவை இப்போதுதான்
கண்டுபிடித்து வருகின்றன.
பிராணனுக்கும் ஆகாசத்திற்கும் மேலே என்ன
இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்று முன்
மனத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கட உபநிடதம் (யஜுர் வேதம்)

1.2.19இந்த சைதன்ய ஸ்வரூபமான
ஆத்மா பிறப்பதில்லை,இறப்பதில்லை,எதனிடமிருந்தும்
இது தோன்றவில்லை,இதனிடமிருந்தும் எதுவும்
தோன்றவில்லை.இது பிறப்பற்றது,என்றும்
உள்ளது,தேய்வற்றது,வளர்ச்சியற்றது,உடல்
கொல்ப்படும் பொதும்
இந்த
ஆத்மா கொல்ப்படுவதில்லை.
1.2.20.இந்த ஆத்மா சிறியதைக்காட்டிலும்
சிறியது.பெரியதைக்காட்டிலும்
பெரியது.உயிர்களுடைய இதயக்குகையில்
உறைகிறது.ஆசையற்றவன்.இந்திரியத்தின்
அமைதியினால் ஆத்மாவினுடைய
மகிமையை அறிகிறான்.சோகத்திலிருந்து விடுபடுகிறான்.
1.2.22. உடல்களுக்குள் உடலற்றதாகவும்
நிலையானவற்றுள்
நிலையானதும்மான,பெரிய.அனைத்தையும்
வியாபிக்கின்ற,ஆத்மாவை அறிந்து தீரன்
துன்பப்படுவதில்லை.
1.2.24.தவறான நடத்தையுடையவன்,இந்திரய
ஒழுக்கமற்றவன்,மனஒருமைப்பாடு அற்றவன்,மன
அமைதியற்றவன் இவர்களால்
ஆத்மாவை அடைய முடியாது.
1.3.7.யார் அறிவற்றவனாகவும்
நெறிப்படுத்தப்படாத
மனதையுடையவர்களாகவும் என்றும்
துாய்மையற்றவர்களாகவும்
உள்ளார்களோ அவர்கள் அந்த மேலான
நிலையை அடைய மாட்டார்கள்.மீண்டும்
மீண்டும் பிறக்கும்
சம்ஸாரத்தை அடைகிறான்.
1.3.8.யார் அறிவுடையவனாகவும்
நெறிப்படுத்தப்படட
மனதையுடையவனாகவும் என்றும்
துாய்மையுடையவனாகவும்
உள்ளானோ,அவன்,எதை அடைவதால்
மீண்டும் பிறப்பதில்லையோ,அந்த மேலான
நிலையை அடைகிறான்.
1.3.12.எல்லா உயிரினங்களுக்குள்ளும்
மறைந்திருக்கின்ற இந்த
ஆத்மா தெளிவாக
விளங்குவதில்லை.கூர்மையான,நுட்பமான
புத்தியின் மூலம் நுண்ணிய
பார்வை உடையவர்களால் இந்த
அத்மா அறியப்படுகிறது.
1.3.13.ஞானி வாக்கை மனத்தில் ஒடுக்க
வேண்டும்.மனத்தை புத்தியில்
ஒடுக்கவேண்டும்.புத்தியை ஸமஷ்டி புத்தியில்
ஒடுக்கவேண்டும்.ஸமஷ்டி புத்தியை சாந்தமான
ஆத்மாவில் ஒடுக்கவேண்டும்.
1.3.14.எமுந்திரு,விழித்துக்கொள்,சான்றோர்களை அடைந்து ஆத்மாவை அறியுங்கள்.
2.1.1.ஈஸ்வரன்
இந்திரியங்களை வெளிநோக்கு உடையதாக
படைத்துள்ளான்.ஆகவே ஒருவன்
வெளி விஷயத்தையே பார்க்கிறான்.தன்னுள்
உள்ள
ஆத்மாவைப்பார்ப்பதில்லை.யாரோ ஒரு தீரன்
மரணமற்ற
நிலையை விரும்பி,வெளியிலிருந்து விலகிய
பார்வையை உடையவனாக தன்னுள் உள்ள
ஆத்மாவைப் பார்க்கிறான்.
2.1.15.எவ்விதம் துாய்மையான நீரில்
துாய்மையான நீர் விடப்படும்
போது துாய்மையாகவே இருக்கிதோ,அதுபோல்
ஞானத்தை உடைய
முனிவருக்கு ஆத்மாவானது பிரம்மமாக
இருக்கிறது.
2.2.7.அவரவர் கர்மத்திற்கேற்பவும்
அவரவர்களுடைய உபாஸனைக்கேற்பவும் சில
ஜீவர்கள் மனித அல்லது மிருக
உடலை எடுப்பதற்கான
கர்பத்தை அடைகிறார்கள்.வேறுசில ஜீவர்கள்
மரம் முதலிய உடலை அடைகிறார்கள்.
2.2.8.இந்தஆத்மா கனவில் விதவிதமான
பொருட்களைத்தோற்றுவித்துக்கொண்டு இந்திரியங்கள்
உறங்கும்போது விழித்துக்கொண்டிருக்கிறது.அந்த
ஆத்மாவே துாய்மையானது.அது ப்ரம்மன்.அதுவே மரணமற்றத.எல்லா உலகங்களும்
அதைச்சார்ந்துள்ளது.எதுவும்
அதைக்கடந்து செல்வதில்லை.
2.2.9 எவ்விதம் உலகில் உள்ள
ஒரே நெருப்பானது ஒவ்வொரு பொருளிலும்
அப்பொருளின்
உருவமாகத்தோன்றுகிறதோ,அவ்விதம்
எல்லா ஜீவர்களுக்குள் இருக்கும்
ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும்
அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது.
வெளியேயும் உள்ளது.
2.2.10 எவ்விதம் உலகில் உள்ள
ஒரே வாயுவானது ஒவ்வொரு பொருளிலும்
அப்பொருளின்
உருவமாகத்தோன்றுகிறதோ,அவ்விதம்
எல்லா ஜீவர்களுக்குள் இருக்கும்
ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும்
அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது.
வெளியேயும் உள்ளது.
2.2.12. எந்த ஒன்று அனைத்தையும்
தன்வசத்தில் வைத்துள்ளதாகவும்
எல்லா ஜீவர்களுக்குள்ளும் ஆத்மாவாக
இருந்து கொண்டும் தன்னடைய
ஒரு ரூபத்தை பலவாக
வெளிப்படுத்துகிறதோ,அந்த
அத்மாவை உடலில் வெளிப்படுவதாக
எந்த தீரர்கள்
அறிகிறார்களோ,அவர்களுக்கு நிலையான
சுகம் கிடக்கிறது.மற்றவர்களுக்கு இல்லை.
2.3.4. உடலின் வீழ்ச்சிக்கு முன்
இங்கேயே ப்ரம்மத்தை அறிந்தவன்
விடுதலையடைகிறான்.அறியவில்லை என்றால்
உயிரினங்களுடைய உலகத்தில் மீண்டும் உடல்
எடுப்பதற்கு முற்படுகிறான்.
2.2.16. இதயத்துடன் ஸம்மந்தப்பட்ட
நுாற்றியோரு நாடிகள் உள்ளன.இந்த
நாடிகளில் ஒன்று தலை உச்சியைப்
பிளந்து வெளியேறுகிறது.அன் வழியாக
மேலே செல்பவன் ப்ரம்ம லோகத்தில்
அதிககால
வாழ்க்கையை அடைகிறான்.வேறு திசையில்
செல்கின்ற மற்ற நாடிகள்
மறுபிறப்புக்கு காரணமாகின்றன.

சுவேதாசுவதர உபநிடதம்

சுவேதாசுவதர உபநிடதம் என்பது
கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம்
ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான்
ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும்
108 உபநிஷத்துக்களில்
இது 14வது உபநிஷத்து.

தைத்திரீய சாகையின்
33 உபநிஷத்துக்களில்
இது ஒன்று என்று தொன்றுத
ொட்டு கருதப்பட்டு வருகிறது.
வித்யாரண்யர் தன்னுடைய

"சர்வோபநிஷத்
அர்த்தானுபூதிப் பிரகாசகத்தில்" இதை 12
வது உபநிஷத்தாக சேர்த்திருக்கிறார்.

பத்து முக்கிய உபநிஷத்துக்களைத் தாண்டி
ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதியிருக்கும்
நூல்களில் இதுவும் ஒன்று. இந்த
பாஷ்யத்தை ஆதி சங்கரர் செய்ததல்ல
என்ற கருத்தும் உள்ளது. (Narayana Sastry:
p. 81).

பொது முன்னுரை

சுவேதாசுவதரர் என்ற
மஹரிஷி இதை உபதேசித்ததாய்
இவ்வுபநிஷத்திலேயே கூறப்பட்டுள்ள்து. சுவேத
என்றால் வெள்ளை; அசுவதர
என்றால் புலன்களாகிய குதிரைக்கூட்டம்.
மஹரிஷியின் பெயர் தூய
புலன்களைக்கொண்டவர்
என்று பொருள்படும்.
ஆறு அத்தியாயங்களைக்கொண்ட
இவ்வுபநிஷத்து ஸாங்க்யம், யோகம் , மாயை
முதலிய பொருள்களைப் பற்றிப்
பேசுகிறது. பிரம்மத்தின் நிர்குணத்
தன்மையையே அதிகமாகப்பேசிய பத்து முக்கிய
உபநிஷத்துகளுக்குப்பிறகு இவ்வுபநிஷத்து த
ான் ஸகுணப் பிரம்மமெனப்படும்
ஈசுவரன் என்ற கடவுள் தத்துவத்தை முன்
நிறுத்திப் பேசுகிறது. வேறுவேறான பல
தத்துவக் கோணங்களை ஒன்றுபடுத்த
முயலுகிறது.(Radhakrishnan, p. 707)

இவ்வுபநிஷத்துப்
பொன்மொழிகள்

அனைத்துலகமும்
பிரம்மத்தை முழுமுதற்காரணமாகக்
கொண்டது. உலகம் ஒர் பிரம்ம
சக்கரம். ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும்
குணங்களைக் குறிக்கும்
மூன்று பட்டைகளாலானது.
சக்கரத்தை சுழற்றுவதும் பிரம்மத்தின்
சக்தியாகிய பிரகிருதி தான். (1.4)

அறிபவனும் அறியப்படுவதும், ஆள்பவனும்
ஆளப்படுவதும் ஆகிய இரண்டும்
பிறப்பற்றவை. அனுபவிப்பவனுக்கும்
அனுபவிக்கப்படுவதற்கும் உறவைக் கற்பிக்கும்
ஒருத்தியாகிய (மாயை எனும்) அவளும்
பிறப்பற்றவளே.
எப்பொழுது இம்மூன்றும் பிரம்மம்
என்று ஒருவன்
அறிகிறானோ அப்பொழுது அவன்
அளவு கடந்து எங்கும் வியாபித்த
ஆத்மாவாகவும் எல்லா வடிவங்களிலும்
விளங்குபவனாகவும்
செயலேது மற்றவனாகவும்
ஆகிறான். (1.9)

இது நிலையாகத் தன்னிடமே உளதென
அறியப்படவேண்டும். அதற்கப்பால்
அறியவேண்டியது சிறிதுமில்லை.
ஆராய்ந்துணர்ந்து அனுபவிப்பவன்,
அனுபவிக்கப்படுவது, அனுபவிக்க
ஏவுவது எல்லாம் இந்த பிரம்மத்தின்
மூன்று வகைகளே.(1.12)

எள்ளினுள் எண்ணெய் போலும், தயிரினுள்
நெய் போலும், ஊற்றுக்களில் நீர் போலும்,
அரணிக் கட்டைகளில் தீ போலும்
இப்பரமாத்மா ஜீவத்மாவிடம்
காணப்படுகிறது. வாய்மையாலும்
தவத்தாலும் எவன் இதைக் காண
முயலுகின்றானோ அவனால் இதைக்
காணமுடிகிறது.(1.15)

இத்தேவனே எல்லாத் திசைகளையும்
வியாபிக்கிறான். இவனே ஆதியில் தோன்றிய
ஹிரண்யகர்ப்பன்.
இவனே கருவினுள்ளிருப்பவன்.
பிறந்தவைகளாகவும் இனி பிறக்கப் போகும்
உயிர்களாகவும் எல்லாப் பிறவிகளுள்ளும்
எங்கும் முகமுடையவனாகவும் நிற்பவன்.
(2.16)

எவன் இவ்வுலகங்களைத் தனது ஆளும்
சக்திகளால் ஆள்பவனோ அந்த உருத்ரன்
(பிரம்மம்) ஒருவனே. இரண்டாவதாக நிற்க
வேறொருவன் இல்லை. அவன்
எல்லா மக்களுள் உள்ளுறைபவன்.
உலகங்களைப்
படைத்து காப்பவனாயிருந்து முடிவு காலத்தி
ல் அவைகளைத் தனக்குள் ஒடுக்கிக்
கொள்கிறான்.(3.2)

சம அந்தஸ்துள்ள இணைபிரியாப் பறவைகள்
இரண்டு ஒரே மரத்தில் வசித்தாலும்
ஒன்று (ஜீவாத்மா ) பழத்தை ருசியுடன்
உண்கிறது;
மற்றொன்று (பரமாத்மா)
உண்ணாமல்
பார்த்துக்கொண்டு மாத்திரம்
இருக்கிறது. (4.6)

பிரகிருதியை மாயையாகவும் எல்லாம் வல்ல
ஈசனை மாயையை ஆட்டி வைப்பவனாகவும்
அறியவேண்டும்.(4.10)

எதனால் இந்தப் பெரிய சக்கரம்
சுழற்றப்படுகிறதோ அது இயற்கை என்று சில
அறிஞர்களும், அவ்வாறே காலம்
என்று பிறரும் மதிமயங்கியவர்களாய்க்
கூறுகின்றனர். உலகில் இதுவெல்லாம்
தெய்வத்தின் மகிமையேயாம்.(6.1)

நிலையுள்ள
பொருள்களிடை நிலையுள்ளவனாயும்
அறிவுள்ள உயிர்களின் அறிவாயும்,
ஒருவனாய் நின்று அனைவருடைய
விருப்பங்களையும் அளிப்பவனாயும்,
அனைத்திற்குக் காரணமாயும்,
ஞானயோகத்தால் அடைதற்குரியவனாயும்
உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன்
எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுகிறான்.
(6.13)

அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும்
நட்சத்திரங்களும் பிரகாசிப்பதில்லை.
மின்னல்கொடிகளும்
பிரகாசிப்பதில்லை.இந்தத்தீ எவ்விதம்
பிரகாசிக்கும். விளங்கிடும
அவனைச்சார்ந்தே அனைத்தும் விளங்குகிறது.
அவனொளியாலேயே இவையனைத்தும்
விளங்குகின்றன.(6.14)

வீடு பெறச்செயல்முறை
ஆண்டவனுக்கு அர்ப்பணமாக எல்லாக்
கருமங்களையும்
செய்து அதனாலேயே கருமத்தினின்று ஒழி
வடைந்து தத்துவத்தின் தத்துவத்தால்
யோகத்தைக் கைக்கொண்டு ஒன்றாலோ,
இரண்டாலோ, மூன்றாலோ, எட்டாலோ,
நுட்பமான ஆத்மகுணங்களால்
நாளடைவில் ஒருவன்
வீடு பெறுகிறான்.(6.3)

அத்வைத வேதாந்த தத்துவப்படி இதன்
விளக்கம்:ஆண்டவனுக்கு அர்ப்பணமாக
ச்செய்யப்படும் எந்த வினையும்
செய்பவரை பந்தப்படுத்தமாட்டா.இ
வ்விதம் பந்தப்படாமல்
செய்யப்படும் கருமம்
செய்பவரின் வாசனை மூட்டையோ கரும
மூட்டையோ அதிகப்படுத்தப்படாது. இவ்விதம்
கருமம் செய்வதால்தான்
வினைகளைக்குறைத்து கருமத்திலிருந்து ஒழிவுப
ெறமுடியும். 'தத்துவத்தின்
தத்துவத்தால்' என்ற
சொற்பிரயோகத்தில் தத்துவம்
இருமுறை வருகிறது. முதல் தத்துவம் 24
தத்துவங்கள் கொண்ட
படைப்பனைத்தையும் குறிக்கும். அதாவது,
பஞ்ச பூதங்கள், மனது, புத்தி,
அகங்காரம், அவியக்தம் முதலிய
நான்கு, கருமப்புலன்கள் ஐந்து,
ஞானப்புலன்கள் ஐந்து,
புலன்களை இழுக்கும் ஓசை முதலிய
ஐந்து ஆக 24. இரண்டாவது தத்துவம்
‘தத்வமஸி’ (அதுவே நீ) என்ற வேதாந்தக்
கூற்றைக் குறிக்கிறது.
ஒன்றாலோ: மனத்தாலோ.
இரண்டாலோ: மனது, புத்தி இவையாலோ,
அ-து, புத்தியால் மனதையடக்கி.
மூன்றாலோ: மனது, புத்தி, அகங்காரம்
இவற்றாலோ. அ-து, புத்தியால்
மனதை அடக்கி,
அகங்காரத்தை வென்று.
எட்டாலோ:
எட்டு பாகமாகச்சொல்லப்பட்ட
‘அபரா பிரகிருதி’யின்
உதவி கொண்டு. பஞ்ச
பூதங்களும், மனது, புத்தி, அகங்காரம்
இவைகொண்டது அபரா பிரகிருதி.

(பகவத் கீதை: 7வது அத்தியாயம்).

வேண்டுதல்
சிலந்திப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி
தனது நூல்களால்
தன்னை மறைத்துக்கொள்வதுபோல்
இயற்கையாகவே பிரகிருதியில் தோன்றும்
பொருள்களால் எந்த தேவன்
தானொருவனாகவே தன்னை மறைத்
துக் கொள்கிறானோ அவன்
நமக்கு பிரம்ம சாயுஜ்யத்தை அளிக்கட்டும்.
(6.10)
ஆதியில்
பிரம்மாவைப்படைத்து அவனுக்கு வேதங்களைக்க
ொடுத்தருளியவன்
எவனோ நமக்குள்ளிருந்து நமது புத்தியைப்
பிரகாசிக்கச் செய்பவன் எவனோ அந்த
தேவனை மோட்சத்தில் விருப்பமுடைய நான்
சரணமடைகின்றேன்.(6.18)

முடிவு

எவனுக்கு தெய்வத்தினிடம் சிறந்த
பக்தியும் தெய்வத்தினிடம்
போலவே குருவினிடமும் பக்தியும் உண்டோ அந்த
மகாத்மாவிற்கு உபதேசிக்கப்பட்டால்தா
ன் இப்பொருள்கள் விளங்கும்.
அவருக்கு, வாய்விட்டுச்
சொல்லாமலிருக்கும் ரகசியப்
பொருள்களும்
தாமாகவே விளங்கிடும். (6.23)

மகோபநிடதம்

மகோபநிடதம் என்பது சாம வேதத்தைச் சார்ந்த
உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான்
ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும்
108 உபநிஷத்துக்களில்
இது 62வது உபநிஷத்து.

ஆறு அத்தியாயங்களில் 13, 77, 57, 131, 186,
83 சுலோகங்களைக் கொண்டது. சாமானிய வேதாந்த
உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது.

முதல் மூன்று அத்தியாயங்களின்
மேலோட்டம்

இவ்வுபநிஷத்துக் கருத்துகள் சற்று உயர்ந்த
தத்துவங்களைக் கொண்டது. ஆதி நாராயணர்
என்று தனித்திருந்த பரம்பொருட்கடவுளின்
தியானத்திலிருந்து ஈசானர் என்ற மகாதேவரும்
நான்முகப் பிரம்மா என்ற படைப்புக்கடவுளும்
உண்டானார்கள். இது முதல் அத்தியாயம்.
பிறந்தவுடனேயே பரம்பொருள்
தத்துவத்திலேயே திளைத்தவரான சுகர் தன்
தந்தையான வியாசரிடம் கண்ணில் தெரியும்
இவ்வுலகின் ஆரம்ப முடிவுகளைப்பற்றிக்
கேட்டார். அவர் சுகரை மிதிலை மன்னன் ஜனகரிடம்
அனுப்பினார். ஜனகர் சுகருக்குச் சொன்ன
உபதேசம் இரண்டாவது அத்தியாயம்.
காணப்படுவதெல்லாம் தோற்றமே. இவையெல்லாம்
அசல் உண்மையல்ல என்ற விழிப்பு ஏற்பட்டு,
உலகவாசனை யாவும் அழிந்தால் அதுதான்
வீடு என்றும் மோட்சம் என்றும் சொல்லப்படுகிறது.
அவ்விதம் மனது சாந்தி நிலையை அடைந்தவன்
வேறொன்றையும் வேண்டுவதில்லை.

மூன்றாவது அத்தியாயத்தில் நிதாகர் என்ற
சிறுவரின் கேள்வி:
'வாழ்க்கையில் ஏற்படும்
எல்லா துக்கங்களிலும் மிகக்
கொடியது ஆசை விளைவிக்கும் துக்கம்
என்று தோன்றுகிறது.
இதனிலிருந்து மீளுவது எப்படி?'

மகோபநிஷத்தின் ஆழமான பாகங்கள்
நான்காவது ஐந்தாவது அத்தியாயங்கள் மிக
ஆழமானவை. வீடு என்ற மோட்சத்தின் வாயிலில்
நான்கு வாயில்காப்பாளர்கள் உள்ளனர்.
புலனடக்கம், ஆராய்ச்சி, மகிழ்ச்சி,
நல்லோரிணக்கம் - இவைதான் அந்த
காப்பாளர்கள். முழுமுயற்சியுடன் ஒன்றைக்
கைக்கொண்டால் அந்த
ஒன்று வயமாகும்பொழுது நான்குமே வயமாகிவிடும்.
படைப்புக்கடவுளால் மனதாலேயே படைக்கப்பட்ட
இவ்வுலகத்தோற்றமும் மனோமயமே.
எங்கு கற்பனை எழுகிறதோ அங்கு மனம்
உளதென்றறி.கற்பனை இல்லாதிருந்தால் காணும்
உலகமும் கற்பனையே என்பது விளங்கும்.
அதுதான் கைவல்யம். கற்பனையால் உதித்த
இவ்வுலகம் கற்பனையாலேயே அழியும்.
ஆன்மாவல்லாததை ஆன்மா எனக்கருதுதல்
ஒரு அஞ்ஞானம்.

ஞானபூமியின் ஏழு படிகள்:
வைராக்கியத்தை முன்னிட்டெழும் சுபேச்சை
எனும் ஆசை.
நன்னடத்தையைக் கைக்கொள்ளும் விசாரணை
எனும் அப்பியாசம்.
இவையிரண்டாலும் புலன்களின்
ஓட்டமாகிற மனது தேய்ந்து இளைப்பது,
தனுமானசி எனப்படுவது.
இவை மூன்றால் சித்தத்தில் பற்று நீங்கி
சத்வாபத்தி எனப்படும் நிலைபெறுதல்.
இதனால் ஏற்படும் அஸம்ஸக்தி,
அதாவது, பற்றற்ற திடமான ஸத்வநிலை.
பதார்த்த அபாவனை , அதாவது,
உள்ளேயும் நிலை பெறாமல் வேளியேயும்
எதையும் நாடாமல் எழும் அறிவு விளக்கம்.
இதனின் நீண்ட பயிற்சியால்
பேதமொழிந்து ஏற்படும் இயற்கையான நிட்டை;
இது துர்யகாகதி எனப்படும்.
இந்தக்கடைசிநிலைதான் ஜீவன்முக்திநிலை.
உலகில் நடக்கவேண்டிய முறை
ஜீவன்முக்தனாக, கொதிப்பற்றவனாக உலகில்
நடமாடிக்கொண்டிரு.உள்ளே ஒரு கலவரமும்
இல்லாதவனாக ஆனால் வெளியில் எல்லாக்
கருமங்களையும் செய்பவனாகவும் இரு. இவர்
உற்றார் அவர் பிறர் என்ற எண்ணமில்லாமல்
உலகம் முழுதும் ஒரே குடும்பம் என்ற பாவனையில்
இரு. அறிய
வேண்டியது எதுவுமன்றி அறிவுமயமாகிய
பரம்பொருள் நான் என்ற நிலையில்
இருந்துகொண்டிருப்பவன் பிரம்ம நிலையில்
இருப்பவன்.

இவ்வுபநிஷத்துப் பொன்மொழிகள்

அவன் எங்கோ தூரத்திலிருப்பவனல்லன்.
அவன் உளனல்லன், இல்லையல்லன்; நான்
என்பவனல்லன்; பிறனென்பவனல்லன்.
பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் என்ற
மூன்றின் மத்தியில் பார்வை மாத்திரமாக
விளங்குபவன்.(2-64,2-69)

விவேகிகளுக்கு நூல்கள் ஒரு சுமை.
விஷயப்பற்றுடையவர்களுக்கு அறிவு ஒரு சுமை.
அமைதி இல்லாதவருக்கு மனது ஒரு சுமை.
ஆன்மாவை அறியாதவருக்கு உடல் ஒரு சுமை.
(3-15)

விஷயத்தின் விஷமம் தான் விஷம்.
விஷம் விஷமல்ல. (3.54)

ஒருபொழுதும் எக்காரணத்தாலும் சங்கற்பமும்
மனதும் பிரிவதில்லை. சங்கற்பம்
இல்லாதிருந்தால் ஆன்மசொரூபம் எஞ்சி நிற்கும்.
(4-52, 4-53)

'நான் பிரம்மமில்லை ' என்ற திடமான
சங்கற்பத்தால் மனம் பந்தத்துக்குள்ளாகிறது.
'எல்லாம் பிரம்மமே ' என்ற திடமான
சங்கற்பத்தால் மனம் மோட்சத்தையடைகிறது.(4.124)
தள்ளப்படவேண்டியதை அள்ள
அலைந்து வருத்தமடையாதே.தள்ளவோ அள்ளவோ எண்
ணமில்லாது,தள்ளுவதையும் அள்ளுவதையும்
தாண்டிநிற்கும் நிலையில் திடமாக இரு. (6-28)