சனாதன தர்மம்

சனாதன தர்மம்

சனி, 29 மார்ச், 2014

கட உபநிடதம் (யஜுர் வேதம்)

1.2.19இந்த சைதன்ய ஸ்வரூபமான
ஆத்மா பிறப்பதில்லை,இறப்பதில்லை,எதனிடமிருந்தும்
இது தோன்றவில்லை,இதனிடமிருந்தும் எதுவும்
தோன்றவில்லை.இது பிறப்பற்றது,என்றும்
உள்ளது,தேய்வற்றது,வளர்ச்சியற்றது,உடல்
கொல்ப்படும் பொதும்
இந்த
ஆத்மா கொல்ப்படுவதில்லை.
1.2.20.இந்த ஆத்மா சிறியதைக்காட்டிலும்
சிறியது.பெரியதைக்காட்டிலும்
பெரியது.உயிர்களுடைய இதயக்குகையில்
உறைகிறது.ஆசையற்றவன்.இந்திரியத்தின்
அமைதியினால் ஆத்மாவினுடைய
மகிமையை அறிகிறான்.சோகத்திலிருந்து விடுபடுகிறான்.
1.2.22. உடல்களுக்குள் உடலற்றதாகவும்
நிலையானவற்றுள்
நிலையானதும்மான,பெரிய.அனைத்தையும்
வியாபிக்கின்ற,ஆத்மாவை அறிந்து தீரன்
துன்பப்படுவதில்லை.
1.2.24.தவறான நடத்தையுடையவன்,இந்திரய
ஒழுக்கமற்றவன்,மனஒருமைப்பாடு அற்றவன்,மன
அமைதியற்றவன் இவர்களால்
ஆத்மாவை அடைய முடியாது.
1.3.7.யார் அறிவற்றவனாகவும்
நெறிப்படுத்தப்படாத
மனதையுடையவர்களாகவும் என்றும்
துாய்மையற்றவர்களாகவும்
உள்ளார்களோ அவர்கள் அந்த மேலான
நிலையை அடைய மாட்டார்கள்.மீண்டும்
மீண்டும் பிறக்கும்
சம்ஸாரத்தை அடைகிறான்.
1.3.8.யார் அறிவுடையவனாகவும்
நெறிப்படுத்தப்படட
மனதையுடையவனாகவும் என்றும்
துாய்மையுடையவனாகவும்
உள்ளானோ,அவன்,எதை அடைவதால்
மீண்டும் பிறப்பதில்லையோ,அந்த மேலான
நிலையை அடைகிறான்.
1.3.12.எல்லா உயிரினங்களுக்குள்ளும்
மறைந்திருக்கின்ற இந்த
ஆத்மா தெளிவாக
விளங்குவதில்லை.கூர்மையான,நுட்பமான
புத்தியின் மூலம் நுண்ணிய
பார்வை உடையவர்களால் இந்த
அத்மா அறியப்படுகிறது.
1.3.13.ஞானி வாக்கை மனத்தில் ஒடுக்க
வேண்டும்.மனத்தை புத்தியில்
ஒடுக்கவேண்டும்.புத்தியை ஸமஷ்டி புத்தியில்
ஒடுக்கவேண்டும்.ஸமஷ்டி புத்தியை சாந்தமான
ஆத்மாவில் ஒடுக்கவேண்டும்.
1.3.14.எமுந்திரு,விழித்துக்கொள்,சான்றோர்களை அடைந்து ஆத்மாவை அறியுங்கள்.
2.1.1.ஈஸ்வரன்
இந்திரியங்களை வெளிநோக்கு உடையதாக
படைத்துள்ளான்.ஆகவே ஒருவன்
வெளி விஷயத்தையே பார்க்கிறான்.தன்னுள்
உள்ள
ஆத்மாவைப்பார்ப்பதில்லை.யாரோ ஒரு தீரன்
மரணமற்ற
நிலையை விரும்பி,வெளியிலிருந்து விலகிய
பார்வையை உடையவனாக தன்னுள் உள்ள
ஆத்மாவைப் பார்க்கிறான்.
2.1.15.எவ்விதம் துாய்மையான நீரில்
துாய்மையான நீர் விடப்படும்
போது துாய்மையாகவே இருக்கிதோ,அதுபோல்
ஞானத்தை உடைய
முனிவருக்கு ஆத்மாவானது பிரம்மமாக
இருக்கிறது.
2.2.7.அவரவர் கர்மத்திற்கேற்பவும்
அவரவர்களுடைய உபாஸனைக்கேற்பவும் சில
ஜீவர்கள் மனித அல்லது மிருக
உடலை எடுப்பதற்கான
கர்பத்தை அடைகிறார்கள்.வேறுசில ஜீவர்கள்
மரம் முதலிய உடலை அடைகிறார்கள்.
2.2.8.இந்தஆத்மா கனவில் விதவிதமான
பொருட்களைத்தோற்றுவித்துக்கொண்டு இந்திரியங்கள்
உறங்கும்போது விழித்துக்கொண்டிருக்கிறது.அந்த
ஆத்மாவே துாய்மையானது.அது ப்ரம்மன்.அதுவே மரணமற்றத.எல்லா உலகங்களும்
அதைச்சார்ந்துள்ளது.எதுவும்
அதைக்கடந்து செல்வதில்லை.
2.2.9 எவ்விதம் உலகில் உள்ள
ஒரே நெருப்பானது ஒவ்வொரு பொருளிலும்
அப்பொருளின்
உருவமாகத்தோன்றுகிறதோ,அவ்விதம்
எல்லா ஜீவர்களுக்குள் இருக்கும்
ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும்
அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது.
வெளியேயும் உள்ளது.
2.2.10 எவ்விதம் உலகில் உள்ள
ஒரே வாயுவானது ஒவ்வொரு பொருளிலும்
அப்பொருளின்
உருவமாகத்தோன்றுகிறதோ,அவ்விதம்
எல்லா ஜீவர்களுக்குள் இருக்கும்
ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும்
அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது.
வெளியேயும் உள்ளது.
2.2.12. எந்த ஒன்று அனைத்தையும்
தன்வசத்தில் வைத்துள்ளதாகவும்
எல்லா ஜீவர்களுக்குள்ளும் ஆத்மாவாக
இருந்து கொண்டும் தன்னடைய
ஒரு ரூபத்தை பலவாக
வெளிப்படுத்துகிறதோ,அந்த
அத்மாவை உடலில் வெளிப்படுவதாக
எந்த தீரர்கள்
அறிகிறார்களோ,அவர்களுக்கு நிலையான
சுகம் கிடக்கிறது.மற்றவர்களுக்கு இல்லை.
2.3.4. உடலின் வீழ்ச்சிக்கு முன்
இங்கேயே ப்ரம்மத்தை அறிந்தவன்
விடுதலையடைகிறான்.அறியவில்லை என்றால்
உயிரினங்களுடைய உலகத்தில் மீண்டும் உடல்
எடுப்பதற்கு முற்படுகிறான்.
2.2.16. இதயத்துடன் ஸம்மந்தப்பட்ட
நுாற்றியோரு நாடிகள் உள்ளன.இந்த
நாடிகளில் ஒன்று தலை உச்சியைப்
பிளந்து வெளியேறுகிறது.அன் வழியாக
மேலே செல்பவன் ப்ரம்ம லோகத்தில்
அதிககால
வாழ்க்கையை அடைகிறான்.வேறு திசையில்
செல்கின்ற மற்ற நாடிகள்
மறுபிறப்புக்கு காரணமாகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக