சனாதன தர்மம்

சனாதன தர்மம்

சனி, 29 மார்ச், 2014

மன்த்ரீக உபநிடதம்

மன்த்ரிக உபநிடதம் என்பது சுக்ல யஜுர்
வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும்.
முக்திகோபநிஷத்தில் ராமபிரான்
ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும்
108 உபநிஷத்துக்களில்
இது 34வது உபநிஷத்து. மிகச்சிறியது.

இருபதே சுலோகங்களுடையது.
பொன்மொழி

விகாரஜனனீம் அஞ்ஞாம்
அஷ்டரூபாம் அஜாம் த்ருவாம்
த்யாயதே அத்யாஸிதா தேன
தன்யதே ப்ரேர்யதே புன:
சூயதே புருஷார்த்தம் ச தேனைவ
அதிஷ்டிதம் ஜகத் .
பொருள்: மேற்சுமத்தீட்டிற்குக்
(superimposition, அத்யாஸம்)
காரணமான அவள் (மாயை)
பிறவா மடந்தை எட்டுவித விகாரங்களின்
தாய் -- அவள் உண்டாக்குகிறாள்,
தூண்டுகிறாள், வளர்க்கிறாள்.
அவ்வாற்றலினால்
இவ்வையகமே மனிதனுடைய
இலக்குகளை வகுத்துக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக